Wednesday, March 13, 2013

திருமேற்றளீஸ்வரர் கோவில்


 ஹரியும் சிவனும் ஒன்றே என்பதை கூறும் தத்துவம் அறிவோம் 





மகாவிஷ்ணு தனக்கு சிவலிங்க உருவம் அருளும்படி
சிவபெருமானை வேண்டி அவ்வுருவத்தை பெற்ற
திருத்தலம் காஞ்சிபுரம் திருக்கச்சிமேற்றளியில் உள்ள
திருமேற்றளீஸ்வரர் கோவில். சிவனின் முன்பு நின்று
விஷ்ணு வேண்டிக்கொண்டிருந்தபோது, சிவன் தான்
தவக்கோலத்தில் நின்றுகொண்டிருப்பதாக நினைத்து
பதிகம் பாடினர் திருஞானசம்பந்தர். ஆனால் சிவா வடிவம்
பெறுவதற்காக, சிவனை வேண்டிக்கொண்டிருந்தவர்
பெருமாள் என்பதை பின்னர்தான் அவருக்கு தெரியவந்தது.


திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த மகாவிஷ்ணுவுக்கு,
சிவனின் லிங்கவடிவம் பெற வேண்டும் என்று ஆவல்
மனதுக்குள் எழுந்தது எனவே சிவலிங்க வடிவம்
பெறுவதற்காக, அருள் செய்யும்படி கயிலைக்கு சென்று
கயிலைநாதரிடம் வேண்டினார் திருமால். ஆனால்
செய்வபெருமானோ இது சாத்தியம் இல்லை என்று கூறி
நழுவிச் சென்றார்.


ஆனால் சிவனை பெருமாள் விடுவதாக இல்லை கடும்
தவம் புரிந்தார், அந்த தவம் சிவனை அசைத்தது , மன
உறுதியுடன் பெருமாள் செய்த தவத்தை நினைத்து
உள்ளம் உருகிய சிவன் திருமாலுக்கு அருள்புரிய திருஉள்ளம்
கொண்டார்.


தவம் செய்துகொண்டிருந்த மகாவிஷ்ணுவின் முனால்
வந்த ஈசன், ' திருமேற்றலீஸ்வரர் கோவிலில் மேற்கு
நோக்கி வீற்றிருக்கும் என்னை வேண்டி தவம் செய்து
வழிபாட்டு வந்தால் லிங்க வடிவம் கிடைக்கப்பெறும்
என்று அருளாசி கூறினார். வழியை கூறினாள் போதாதா
வாசுதேவன் மைந்தனுக்கு, மறுகணமே அத்தலத்தில்
சென்று தீர்த்தத்தில் நீராடி, வேகவதி நதிக்கரையில் மேற்கு
நோக்கி வீற்றிருந்த ஈசனை பார்த்து கிழக்கு நோக்கி நின்ற
கோலத்திலேயே தவம் இயற்றி வழிபட தொடங்கினார்.


அப்போது சிவதல யாத்திரைக்கு அங்கு வந்த திருஞான
சம்பந்தர், தவகோலத்தில் நின்று கொண்டிருப்பது
சிவன்தான் என்று எண்ணி, சிவனுக்கு பின்புறத்தில் சற்று
தள்ளி நின்று கொண்டு அவரை நினைத்து பதிகம்
பாடினர். அவரது பாடலில் மனதை பறிகொடுத்த விஷ்ணு
அப்படியே உருகினார். பாதம் வரையில் உருகிய விஷ்ணு
லிங்க வடிவம் பெற்றபோது சம்பந்தர் பாடலை முடித்தார்.


இதனால் விஷ்ணுவின் பாதம் மட்டும் அப்படியே நின்று
விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும் அதற்க்கு
முன்பு பாதமும் இருப்பதை காணலாம். திருஞான
சம்பந்தர் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர்
'ஓதஉருகீஸ்வரர்' என்று பெயர் பெற்றார் .


திருமேற்றலீஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் ஈசன்
சுயம்புவாக மேற்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கிறார்.
மேற்கு நோக்கி இருப்பதன் காரணமாகவே இவருக்கு
மேற்றலீஸ்வரர் (மேற்கு பார்த்த தளி)(தளி என்றால் கோவில்
என்று பொருள்). திருமேற்றலீஸ்வரரே இங்கு பிரதானமானவர்
என்றாலும் 3 நிலை கொண்ட கோவிலின் ராஜகோபுரம்
பிரதான வாசலும் ஓதஉருகீஸ்வரருக்கே உள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.


ஓதஉருகீஸ்வரர் கருவறையில் சிவ வடிவான லிங்கத்தையும்
அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே சமயத்தில் தரிசிப்பதால்
வாழ்க்கையில் குறைவில்லாத வளம் கிடைக்கும் என்பது
அனைவரின் நம்பிக்கையாகும்.


காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு காமாட்சி
அம்மனே பிரதான அம்பாளாக இருப்பவர் என்பதால் பெரும்பாலான
சிவன் கோவில்களில் அம்பாளுக்கு என்று தனி சன்னதி இருப்பதில்
ஆனால் இந்த தலத்தில் கிழக்கு பார்த்த தனி சன்னதியில் அம்பாள்
பராசக்தி இன்ற நாமத்துடன் சாந்தமான திருகோலத்தில்
வீற்றிருப்பது தனிச்சிறப்பாகும்.


கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் கீழ் இருக்கும் முயலகன்
அவருக்கு இடது பக்கமாக திரும்பி இருப்பது வித்தியாசமான
கோலமாக பார்க்கப்படுகிறது. நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர்
குரோதர், மண்டலாதிபதிகள் உள்பட 116 பேர் மற்றும் புதன் ஆகியோர்
வழிபட்ட சிறப்பு மிக்க தலம் இது.


தெருக்கோடியில் நின்று பதிகம் பாடிய திருஞானசம்பந்தருக்கு
அந்த இடத்திலேயே தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
எப்போதும் கையில் தாளத்துடன் காட்சி அளிக்கும் திருஞான
சம்பந்தர் இங்கு வணங்கிய கோலத்தில் வீற்றிருக்கிறார்.
திருஞான சம்பந்தருக்கு, சம்பந்த பிள்ளையார், ஆளுடைப்பிள்ளையார்
என்ற பெயர்களும் உண்டு என்பதால், இவரது பெயராலேயே
இந்த பகுதி பிள்ளையார் பாளையம் என்று அழைக்கபடுகின்றது.


அமைவிடம்: காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர்
தொலைவில் பிள்ளையார் பாளையம் என்ற இடத்தில் இக்கோவில்
அமைந்துள்ளது.


ஆலய தரிசன நேரம்:- காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும்
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை
திறந்து இருக்கும்.

1 comment:

  1. நல்ல தகவல் , அடுத்தமுறை காஞ்சிபுரம் சென்று
    இந்த கோவிலை தரிசிக்கவேண்டும்

    ReplyDelete