Wednesday, March 13, 2013

காரடையான் நோன்பு நாளை 14.03.2013


காரடையான் நோன்பு நாளை 14.03.2013
(பிற்பகல் 3.20 to 4.00 pm)





சாவித்திரி விரதம், காமாட்சி விரதம் என்று பல பெயர்களை
கொண்ட உன்னதமான விரதம், காரடையான் நோன்பு ஆகும்
திருமணமான பெண்கள் தங்கள் மாங்கல்ய பழத்துக்காக
மேற்கொள்ளும் விரதம் இது, சத்யவான் உயிரை எமனிடம்
இருந்து மீட்டுக் கொண்டு வந்தவர் சாவித்திரி, இவர் இந்த
நோன்பை தவறாமல் அனுஷ்டித்து வந்ததன் பலனே இவருக்கு
தன கணவரை மீட்டுவரும் பாக்கியம் கிடைத்ததாக கூறப்படுகிறது


அஸ்வபதி என்ற மன்னனுடைய புத்ரி சாவித்திரி ஒருமுறை
காட்டிற்கு சென்றபோது அங்கு வாழ்ந்த சத்யவான் மீது காதல்
கொண்டு , இருவரும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக
நேசித்து வந்தனர். இதனை தனது தந்தையிடம் கூறி
சத்தியவானை மணக்க அனுமதி வேண்டினாள் தன் நாடு
திரும்பியதும்.


மகளின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சத்யவான்
யார் என்பது பற்றி அஸ்வபதி விசாரித்தபோது , அவன் ஒரு
ராஜகுமாரன் என்றும் ஆனால் அவனுக்கு அற்ப ஆயுள் என்றும்
நாரத முனிவர் மூலமாக அறியப்பெற்றான்.


மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவது தந்தையின்
கடமையாக எண்ணிய போதிலும் ஒரு அற்ப ஆயுள்
உள்ளவனுக்கு தன் மகளை மணமுடித்து வைக்க
விரும்பாத அஸ்வபதி, மகளிடம் அவனை திருமணம்
செய்துகொள்ள வேண்டாம் என்று மறுத்துக்
கூறினார், இருப்பினும் இறுதியில் சாவித்திரியின்
பிடிவாதமே வென்று சத்தியவானை கணவனாக
கைபிடித்தார்.

ஒருமுறை காட்டில் சத்யவான் மனைவி சாவித்ரியின்
மடியில் தலை வைத்து படுத்து இருந்தான் அன்றைய
தினம் காரடையான் நோன்பு நாள் அதுவே சத்தியவானின்
இறுதி நாளாகவும் இருந்தது. அந்த சமயத்தில் எமன் அங்கு
வந்து தனது பாசக்கையிற்றை வீசி சத்யவானின் உயிரை
பறித்துக் கொண்டு சென்றான்.

எவர் கண்களுக்கும் புலப்படாத சத்யவான் உத்தமியான
சாவித்ரியின் பார்வையில் இருந்து தப்ப முடியவில்லை.
எமனை பின்தொடர்ந்த சாவித்ரியை கண்ட எமன் ஒரு பெண்
தன்னை பின்தொடர்வதைக்கண்டு சற்று அதிர்ச்சியுற்று, உனக்கு
என்ன வேண்டும் கேள், அதை விடுத்தது என் பின்னால் வந்து
என்னை தொந்தரவு செய்யாதே என்று கூறினான்.

இதைக்கேட்ட சாவித்திரி எனக்கு பிறக்கும் நூறு
குழந்தைகளையும் தன மடியில் வைத்துக்கொண்டு
என் மாமனார் கொஞ்சவேண்டும் என்று கூற , சற்றும்
யோசிக்காத எமன் அப்படியே ஆகட்டும் என்று கூறி
அங்கிருந்து புறப்பட்டார்.

அவரை வழிமறித்த சாவித்திரி நீங்கள் கொடுத்த
வரம் உண்மை என்றால் எனது கணவரின் உயிரை
திருப்பி தாருங்கள் என்று கூறினாள்.

அப்போதுதான் தான் செய்த தவற்றின் பிழை உணர்ந்தான்
எமதர்மன் கொடுத்த வரத்தையை மீறமுடியாமல்
சத்யவானின் உயிரை திருப்பி கொடுத்துவிட்டு அங்கிருந்து 
புறப்பட்டான்.

சத்யவானின் உயிரை சாவித்திரி மீட்டு பெறுவதற்கு
காரணமாக இருந்தது அவள் கடைபிடித்த காரடையான்
நோன்பின் வலிமையே காரணம். மாங்கல்ய பலம் தரும்
இந்த விரதத்தை காமாட்சி அம்மனும் கடைபிடித்துள்ளார்.
காரடையான் நோன்பை காமாட்சி விரதம் என்றும்
அழைக்கலாயினர்

இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள்
காலையில் எழுந்து நீராடி, கார் அரிசியை மாவாக்கி ,
அதனுடன் காராமணி சேர்த்து , வெல்லம் சேர்த்து ,
வெல்ல அடை, (உப்பு அடை) செய்து அம்மனுக்கு
நெய்வேத்தியம் செய்து , நோம்பு சரடு கழுத்தில்
அணிந்து , இறைவனை வணங்கி , கணவனை
வணங்கி விரதம் கடைபிடிக்க வேண்டும்.





வெல்ல அடைதான் பிரதானம் , உப்பு அடை நமது
விருப்பத்திற்கேற்ப செய்வது.


"உருகாத வெண்ணையும் , ஓரடை நோன்பும்
ஒருநாளும் என்கணவன் பிரியாதிருக்க வேண்டும்"




என்று கூறி நோம்பு சரடு கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும்

No comments:

Post a Comment