Sunday, December 9, 2012

நெறி



தினசரி தியானம்



நெறி

இறையே, உன் காட்சியைப் பெறாதிருக்கிறபொழுதும் உன்னை அடைதற்கான நெறியில் நான் சென்று கொண்டிருப்பேனாக.


வீண்காலம் கழிக்காது சரியான பாதையில் போய்க் கொண்டிருப்பவர்கள் சேர வேண்டிய இடத்தைப் போய்ச் சேருவர். நாம் அனைவரும் பரம்பொருளிடத்து யாத்திரை போய்க் கொண்டிருக்கிறோம். நெறி அல்லது வழி பிசகாதிருப்போமாகில் அவரைச் சென்றடைவது திண்ணம்.


மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ
நின்னை மறக்கை நெறியோ பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment