தினசரி தியானம்
மாயை
ஈசா, உனது யோக மாயையினால் நீ உலகாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறாய். மாயை சொரூபமாகக் அல்லாது உன்னை நான் உள்ளபடி காண்பேனாக.
முதலில் முட்டையாயிருந்து பிறகு பறவையாவது பறப்பனவற்றின் இயல்பு. பரம்பொருள் பிரபஞ்ச சொரூபமாகக் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஞானக்கண் பெறுகிறவர்களுக்குப் பிறகு அவர் உள்ளபடி தமது மெய்க்காட்சியளிக்கிறார். பிரபஞ்சமாகத் தம்மைக் காட்டிக் கொள்வது அவருடைய இயல்பு. இந்த இயல்பை மாயை என்கிறோம்.
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்
இல்லையெனின் இங்கே இருக்கும் பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment