Monday, December 10, 2012

நீர்க்குமிழி



தினசரி தியானம்



நீர்க்குமிழி

இறைவா, நீ நீர். நான் நீர்க்குமிழி. என் வடிவத்தில் நான் வாஞ்சை வைக்காது உன் சொரூபத்தைப் பற்றியிருப்பேனாக.


நாமரூபத்தில் நாம் மயங்கியிருக்கிறோம். ஆனால் ரூபம் ஓயாது மாறுவதால் நாமமும் மாறுகிறது. பின்பு பொருளோ நாமரூபத்தில் பாதிக்கப்படாதிருக்கிறது. நீர்க்குமிழி போன்றது நாமரூபம். அது நிலைத்திருப்பதில்லை. அழிகிற நாமரூபத்தை ஒதுக்கிவிட்டுப் பொருளைக் காணக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.


நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்
கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment