Friday, December 7, 2012

அரசமரத்தின் சிறப்பு

அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் அரசமரத்தின் சிறப்பு!



தெய்வீகமான மரங்களில் சிறப்பானது அரசு. அரசமர சமித்து(சுள்ளி ) ஹோமம், யாக குண்டங்களில் நெருப்பிட பயன்படுத்தப்படும். மும்மூர்த்திகளின் வடிவமாகத் திகழும் இதன் அடியில் பிரம்மாவும், நடுவில் விஷ்ணுவும், உச்சியில் சிவனும் இருப்பதாக ஐதீகம். இதற்கு அஸ்வத்த விருட்சம் என்று பெயர். அஸ்வத்தம் என்றால் குதிரை. ஒருமுறை அக்னிதேவன், குதிரையாக மாறி அரசமரத்தில் ஒளிந்து கொண்டதால் இதற்கு அஸ்வத்தம் என்ற பெயர் ஏற்பட்டது. கார்த்திகை சோமவாரமும், அமாவாசையும் கூடி வரும் நாளில் பெண்கள் அரசமரத்தை வலம் வந்து வழிபடுவது நல்லது. இதன் அடியில் நாகங்களை பிரதிஷ்டை செய்யும் வழக்கம் தமிழகத்தில் மரபாக பின்பற்றப்படுகிறது. சர்ப்பதோஷத்தால் திருமணம், குழந்தைப்பேறு தடைபடுபவர்கள் அரசமரத்தடியில் உள்ள நாகர்களை வழிபடுவது நல்லது.

விஞ்ஞான உண்மை: அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அரச மரம் சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment