தினசரி தியானம்
முக்கனி
யோகம், பக்தி, ஞானம் என்னும் முக்கனியை இறைவா, உனக்குப் படைத்து வணங்க நான் கற்றுக் கொள்வேனாக.
வாழை, மா, பலா ஆகிய மூன்றை முக்கனி என்கிறோம். இவைகளுள் ஒவ்வொன்றும் தன்னளவில் சுவையும் சத்தும் உடையது. பின்பு மூன்றுஞ் சேருங்கால் சுவையிலும் உணவுச் சத்திலும் அவை பன்மடங்கு மேலோங்குகின்றன. கடவுளுக்குப் படைக்க அவை முற்றிலும் பொருத்தமானவைகள். மனம், மொழி, மெய்யாகிய முக்கனிகளை நாம் கடவுளுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வார்சிவ
ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment