தினசரி தியானம்
நீங்கியிரு
இறைவனுக்கு அன்னியமானதிலிருந்து மனதே நீ நீங்கியிரு. நித்தியானந்தம் அப்பொழுது உனக்குச் சொந்தம்.
நீர் ஒன்று நீங்கலாக ஏனைய எல்லாவற்றினின்றும் மீன் விலகியிருக்கிறது. ஏனையவற்றைச் சார்ந்தால் அதற்குத் துன்பம். சச்சிதானந்தத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களிடத்திருந்தும் நீ விலகியிரு. அப்பொழுது உனக்குக் கேடு ஒன்றுமில்லை.
உண்டோ நமைப்போல வஞ்சர் - மலம்
ஊறித் ததும்பும் உடலைமெய் யென்று
கொண்டோ பிழைப்பது இங்கு ஐயோ - அருட்
கோலத்தை மெய்யென்று கொள்ளவேண்டாவோ!
-தாயுமானவர்
No comments:
Post a Comment