Friday, December 28, 2012

கிறுக்கனின் , கிறுக்கல்

இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (1)

பெண்


பெண்ணைப்பற்றி எழுத நினைத்தேன்
கண்ணைப்பறிக்கும் மின்னல் , புலன்
செவிடாகும் அளவில் இடியோசை
அறிவிலியே , அறிவிலியே
உன்னை பற்றி அறியாத நீ பெண்ணை பற்றி
எழுதுதல் எங்கனம் ,


உன்னைபெற்றவள் பெண் ,
உன்னை உற்றவள் பெண்
ஆனால் உனக்கு வேண்டாம் பெண்
கருத்துச் சிதைவால்
நீ கருச்சிதைவை வேண்டினாய்


இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (2)




சுதந்திரம்


சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்
தந்திரத்தில் வந்த மாங்காயுமல்ல
நவீன எந்திரத்தின் எழுச்சியுமல்ல
விடியும் இரவின் விளைச்சல் அது
விடியா பகலின் உயிர் மூச்சு அது


சுதந்திரம் யாருக்கு , சுரண்டல் காரருக்கா
சுயலாபம் நோக்கும் கயவருக்கா
பெண் போதை கொண்ட பித்தனுக்கா
கள்ள வாணிப களவானிக்கா


எண்ணிப்பார்க்கின்றேன் , ஏன் இந்த
சுதந்திரம் , தந்திரக்கார்கள் நிறைந்த
என் மக்களுக்கு ஏன் இந்த சுதந்திரம் என்று
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலை கெ ட்ட மாந்தரை நினைக்கையிலே









இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (3)


பெற்றோர்



பெற்றோர் , பெற்றோர் , பெற்றோர்
எதைப் பெற்றோர், பொன் பெற்றோரா
பொருள் பெற்றோரா , கண் பெற்றோரா
கல்வி பெற்றோரா , மழலை பெற்றோரா


அனைவரும் பெற்றோரே , எதோ ஒன்றை
வாழ்வில் பெற்றோரே , பெற்ற சுதந்திரத்தை
பேணிக்காக்காத பெற்றோர் பலர் இந்நாட்டிலே


பெற்றால் தான் பிள்ளையா என்ற கேள்வி வரும்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
என்று நினைக்கையிலே




இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (4)


லஞ்சம்




லஞ்சம் தஞ்சம் புகுந்தது யாரிடம் ??
கொடுப்பவனிடமா !! வாங்குபவனிடமா


இதை இப்படியும் பார்க்கலாமே
பணபரிமாற்றமே லஞ்சமல்ல ,
பாசப்பரிமாற்றமும் லஞ்சமே ,


தாய்க்கும் மனுக்குமிடையில் லஞ்சமில்லையா
காதலனுக்கும் காதலிக்கும் லஞ்சமில்லையா
ஏன் கடவுளுக்கும் பக்தனுக்குமிடையில் கூட
லஞ்சம் தலைவிரித்தடுகின்றதே
காரிய சித்தி தந்தால் காணிக்கையாய் உண்டியலில்
கோடி கோடியாய் பணம் , தங்கம், வைரம், வைடூரியம்


விடைகாணா புதிர் இந்த லஞ்சம் , இது
தஞ்சம் புகுந்தது யாரிடம் ?? 
கண்டுபிடியுங்கள் !!!




இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (5)




வாழ்த்து




யாருக்கு வாழ்த்து ,
வென்றவனுக்கா தோற்றவனுக்கா
சாதித்தவனுக்கா சோதித்தவனுக்கா
வாழ்ந்தவனுக்கா , வீழ்ந்தவனுக்கா
யார் உன்னை வாழ்த்த வேண்டும்
யாரை நீ வாழ்த்தவேண்டும்
முத்தவனை வாழ்த்த வயதில்லை என்பாய்
இளையவனை வாழ்த்திப்பபயனில்லை என்பாய்
உன்னை நீயே வாழ்த்திக்கொள் , நீ உயர்வாய்


இதோ இந்த கிறுக்கனின் , கிறுக்கல் (6)

பகுத்தறிவு


கண்ணை மூட்டி கிறுக்கினாய் இது நேரம்
என்னைப்பற்றி எழுதும் நேரம்
அறிவுக்கண்ணை திறந்தாயோ ?
பகுத்து அறியும் திறனும் பெற்றாயோ !!
விண்ணை முட்டும் விந்தைகள்
வியக்க வைக்கும் சந்தைகள்
கன்னைகட்டும் வித்தைகள்
இறைவன் இல்லை என்று சொல்வதிலே
இருந்தால் நலமே என்று சொன்னானாம்
இவனும் பகுத்து அறிந்தானோ












No comments:

Post a Comment