தினசரி தியானம்
அத்வைதம்
சூரியனும் சூரிய கிரணமும் போன்று இறைவா, நான் உனக்கு அன்னியமானவன் அல்லன் என்பதை அறிந்துகொள்ள அருள்புரிவாயாக.
அலையும் கடலும் இரண்டு பொருள்கள் அல்ல. அவைகள் அத்வைதம். சிவமும் சக்தியும் அத்வைதம்; பிரம்மமும் மாயையும் அத்வைதம்; உடலும் உயிரும் அத்வைதம்; ஜகத்தும் ஜீவனும் அத்வைதம்; சேதனமும் அசேதனமும் அத்வைதம்; ஜீவாத்மாவும் பரமாத்மாவும் அத்வைதம்.
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோராது - இகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்வைதக் கட்டுக்குள் ஆவதென்றோ காண்.
-தாயுமானவர்
No comments:
Post a Comment