Saturday, December 29, 2012

மகரவிளக்கு


ஐயப்பனின் மகரவிளக்கு சிறப்பு

சூரியனின் சஞ்சாரத்தில் மகரராசிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. தென்திசை பயணித்த சூரியன் வடதிசை நோக்கி பயணத்தைத் துவக்கும் தினத்தையே மகரசங்கராந்தி என்று கொண்டாடுகிறோம். 




ஐயப்ப தரிசனத்தில் இந்நாள் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகத் திகழ்கிறது. மார்கழி மாதம், தைமாதத்திற்கு வழிவிட்டுக் கொடுக்கும் இந்நாளில், சபரிமலை யாத்திரை, மகரவிளக்கு ஜோதியோடு சுபநிறைவு பெறுகிறது. ஐயப்ப சந்நிதானத்தின் நேர் எதிரில் பொன்னம்பல மேட்டில் ஆகாயத்தை எட்டும் மலைச்சிகரங்களில் மகர ஜோதி தோன்றுகிறது அப்போது எங்கும் சரண கோஷங்கள் முழங்குகிறது. 




ஜோதியின் ஒளி, பக்தனின் விழியில் பட்ட அந்த கணத்திலேயே அருள்வெள்ளம் உள்ளத்திலும், உயிரிலும் கலக்கிறது. ஜோதி வடிவாக ஐயப்பனைக் காண விண்ணுலக தேவர்களும், தவம் செய்யும் முனிவர்களும் வருவதாக ஐதீகம். மகரஜோதி தினமான 14.1.2013 அன்று மாலை 6.30 மணிக்கு திருவாபரணம் அணிவித்து தீபாரானையும், அதை தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் ஜோதி தெரியும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

1 comment: