தினசரி தியானம்
அருள் நிலை
மருளிலே மயங்கி மாயாஜகத்தில் உழலும் என்னை எம்மானே, அருளிலே அசையாதிருக்க வைப்பாயாக.
மனதின் ஏக காலத்தில் மாறுபடும் இரண்டு காட்சிகளைக் காண்பதில்லை. பாம்பு என்னும் காட்சி தென்படும் பொழுது கயிறு என்னும் காட்சியில்லை. கயிற்றைக் கயிறாக உணரும்போது பாம்பு இல்லை. பொருளை இயற்கையாகக் காண்பது மருள் நிலை. பொருளைப் பரமனாகக் காண்பது அருள்நிலை.
அருள் எலாந்திரண்டு ஓர்வடி வாகிய
பொருள் எலாம்வல்ல பொற்பொது நாத! என்
மருள் எலாங்கெடுத்தே உளம் மன்னலால்
இருள் எலாம் இரிந்து எங்கொளித் திட்டதே?
-தாயுமானவர்
No comments:
Post a Comment