Friday, December 21, 2012

நான்





தினசரி தியானம்



நான்

நான் என்பதை இறைவா, உனக்கே உரியதாக்கி விடுவேனாக.


நான் என்பதற்கு இலக்காயிருப்பது எது? உடலா, தசையா, ரத்தமா, எலும்பா? மனம், புத்தி முதலிய அந்தக்கரணங்களா? நான் என்பது வெங்காயம் போன்றது. சருகுகளை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு வெங்காயத்தில் எஞ்சியிருப்பது ஒன்றுமில்லை. கருவி கரணங்களை நீக்கிய பிறகு நான் என்பதற்கு இலக்காக ஒன்றுமில்லை.


ஊன்கெட்டு உயிர்கெட்டு
உணர்வுகெட்டு என் உள்ளமும் போய்
நான்கெட்ட வாபாடித்
தெள்ளேணங் கொட்டாமோ?
-மாணிக்கவாசகர்

No comments:

Post a Comment