Thursday, December 20, 2012
மனம்
தினசரி தியானம்
மனம்
தீயில் போட்ட அடுப்புக்கரி தானே தீயாவது போன்று தேவே, என் மனத்தை உன்னிடம் கொடுத்துவிட்டால் அது உன் சொரூபம் ஆய்விடுகிறது.
மனம் இருக்கும் வரையில் உலகக் காட்சியிருக்கிறது. நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகக் காட்சியளிக்கிறது; கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகத் தென்படுகிறது. தெய்விக மனத்துக்குத் தெய்வக் காட்சி தென்படுகிறது. மனம் அழியுங்கால் காணப்படும் உலகும் மறைகிறது. மனோ நாசத்துக்குப் பிறகு எஞ்சியிருப்பது மெய்ப்பொருளே.
சிந்தை பிறப்பதும் ஆங்கே - அந்தச்
சிந்தை இறந்து தெளிந்ததும் ஆங்கே
எந்த நிலைகளும் ஆங்கே - கண்ட
யான் தான் இரண்டற்று இருந்ததும் ஆங்கே.
-தாயுமானவர்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment