Sunday, December 2, 2012

பித்தன்





தினசரி தியானம்



பித்தன்

பாரினில் உள்ளோர் வெவ்வோர் பொருள்களைக் குறித்துப் பித்துப் பிடித்திருக்கையில் பெம்மானே, நான் உன்பொருட்டுப் பித்தன் ஆவேனாக.


பரம்பொருளுக்கு அமைந்துள்ள பல பெயர்களுள் பித்தன் என்பது முற்றிலும் பொருத்தமானது. உயிர்களைத் தனக்கு உரிமையாக்கிக் கொள்ளுதலில் அவன் பெரும் பித்துப் பிடித்திருக்கிறான். இனி அவனை அடையவேண்டும் என்னும் பித்தம் உயிர்களுக்கு வந்துவிட்டால் முன்னேற்றம் மிக எளிதாகிவிடுகிறது.


எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே
பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment