Saturday, December 1, 2012

ஏட்டுக் கல்வி





தினசரி தியானம்



ஏட்டுக் கல்வி

சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே, உன் சான்னித்தியத்தை உணரும்போது நூல் ஆராய்ச்சி சுவையற்றுப்போய் விடுகிறது.


வெளியூரில் இருக்கும் புதல்வன் ஒருவனுக்கு அவனுடைய பெற்றோரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. அதைப் படித்துக் கொண்டிருக்கும்போது பெற்றோரே நேரில் வந்து விட்டனர். உடனே மகன் கடிதத்தை ஒருபுறம் வைத்துவிட்டுத் தாய் தந்தையருடன் பேச ஆரம்பித்தான். அதே விதத்தில் ஏட்டுக் கல்வி கடவுளின் அருளைப் பெறும்வரையில்தான் பயன்படுகிறது.


கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
-திருக்குறள்

No comments:

Post a Comment