Sunday, December 2, 2012

கலை





தினசரி தியானம்



கலை

கலைகள் யாவும் முடிவில் கடவுளின் பெருமையையே விளக்குகின்றன என்பதை நான் அறிந்துகொள்வேனாக.


கலைஞானங்கள் யாவும் உலகத்தில் உள்ள அதிசயங்களை விளக்குகின்றன. ஒவ்வொரு கலையும் கடைசியில் கடவுள்தான் இவ்வுலகாகத் தோன்றிக் கொண்டிருக்கிறார் என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே கற்கவேண்டிய முறையில் கலையைக் கற்றால் மெய்ப்பொருளை அடைதற்கு அது உபாயமாகும்.


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
-திருக்குறள்

No comments:

Post a Comment