தினசரி தியானம்
தடுத்தாளுதல்
அறியாமையினால் தீயவழியில் செல்லும் குழந்தையைத் தாய் காப்பாற்றுவது போன்று என்னை இறைவா, புன்மையின்கண் போகாது தடுத்தாள்வாயாக.
தம்மைத் தடுத்தாள வேண்டுமென்று சுந்தரர் பிறக்கும்பொழுதே பரமனிடம் வரம் வாங்கிக் கொண்டு வந்தார். கிரீசன் என்னும் பாபியை ஸ்ரீராமகிருஷ்ணர் தடுத்தாண்டார். தகுதி நம்மிடம் முழுதுமில்லையெனினும் நம்மைத் தடுத்தாளும்படி கருணாகரனிடம் நாம் பரிந்து கேட்டுக் கொள்வோம்.
தானாக வந்து தடுத்தாண் டெனையின்ப
வானாகச் செய்த இன்ப வானே பராபரமே.
-தாயுமானவர்
No comments:
Post a Comment