தினசரி தியானம்
குறி
இறைவா, நான் அடைதற்குரிய குறியாய் இருப்பவன் நீயே. இதை நான் யாண்டும் நினைவில் வைத்துக் கொள்வேனாக.
அண்டத்திலுள்ள யாவும் புறப்பட்ட இடத்தையே திரும்பிப் போய்ச்சேர்வதைக் குறியாகக் கொண்டிருக்கின்றன. கடலினின்று கிளம்பிய நீராவி திரும்பவும் கடலையே சென்றடைகிறது. நான் கடவுளிடத்திருந்து புறப்பட்டு வந்தவர்கள், திரும்பவும் அவரைச் சென்றடைவது நமது குறியாகும்.
குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்?
-பத்திரகிரியார்
No comments:
Post a Comment