Thursday, December 13, 2012

அக்ஷய பாத்திரம்





தினசரி தியானம்



அக்ஷய பாத்திரம்

அண்ணலே, நீ அக்ஷய பாத்திரம். உன்னிடத்திலிருந்து எதை, எவ்வளவு எடுத்தாலும் நீ குறைவில்லாத நிறை பொருள். உன்னை நான் எனக்குச் சொந்தமாக்கிக் கொள்வேனாக.


உலகம் முழுதுக்கும் மழை நீராக மாறியமைவது கடல் நீர், ஆயினும் அது யாண்டும் குறையாதது. உயிர்கள் அனைத்தும் தாம் வேண்டியவைகளைச் சர்வேசுவரனிடமிருந்து பெறுகின்றன. தேவைகளை ஓயாது நல்குதற்கிடையில் அவர் அக்ஷய பாத்திரமாகவே இருந்து வருகிறார்.


எத்தனயோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனைபேர் உண்டாலும் அணுவுங் குறையாண்டி.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment