Wednesday, December 12, 2012

அஷ்ட சித்திகள்





தினசரி தியானம்



அஷ்ட சித்திகள்

எந்தையே, உன் சிருஷ்டியிலுள்ள விந்தைகளைக் கண்டு நான் மயங்கலாகாது. உன்னோடு பிரியாத இணக்கம் கொள்ளுதலையே நான் வேண்டி நிற்கிறேன்.


பேரரசன் ஒருவனைக் கண்டு அவனோடு இணக்கம் பூணச் செல்லும் ஒருவன் அரண்மனையிலுள்ள அதிசயங்களைக் கண்டுகளித்து வருவானாகில் அவன் அறிவிலியாவான். கடவுள் சிருஷ்டியிலுள்ள சித்திகள் பலப்பல. அவை யாவும் அஷ்ட சித்திகள் என இயம்பப்படுகின்றன. நீர்மேல் நடப்பது நிலத்தில் புதையுண்டு சாகாது கிடப்பது போன்றவை அவைகள். ஆத்மசாதகன் அவைகளை நாடலாகாது.


சித்திநெறி கேட்டல் ஜெகமயக்கம் சன்மமற
முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment