Tuesday, December 11, 2012
சாகக் கற்றுக் கொள்
தினசரி தியானம்
சாகக் கற்றுக் கொள்
எனது முன்னேற்றத்துக்கு வாழ்வு பயன் படுவது போன்று சாவும் பயன்படுகிறது என்பதை இறைவா, எனக்குப் புகட்டியருள்வாயாக.
உடலை உறுதிப்படுத்துவதற்கும் உள்ளத்தைத் தெளிவுபடுத்துதற்கும் உறக்கம் தேவை. பழுதுபட்ட உடலை மாற்றிக் கொள்ளுதற்கும் புதிய சூழ்நிலையை உண்டு பண்ணிக் கொள்ளுதற்கும் மரணம் முற்றிலும் அவசியமாயிருக்கிறது. வாழ்ந்திருக்கும் பொழுதே மாய்ந்து போனவன் போன்று யார் ஆய்விடுகிறானோ அவன் ஞானத்துக்குத் தகுதியுடையவன் ஆகிறான்.
ஆவியொடு காய மழிந்தாலும் மேதினியில்
பாவியென்று நாமம் படையாதே - மேவியசீர்
வித்தார முங்கடம்பும் வேண்டாம் - மடநெஞ்சே
செத்தாரைப் போலத் திரி.
-பட்டினத்தார்
Labels:
தினசரி தியானம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment