Thursday, November 29, 2012

தொண்டன்





தினசரி தியானம்



தொண்டன்

உனக்குத் தொண்டு புரிந்தே நின் அன்பர்கள் எல்லாம் உனக்குரியவர் ஆயினர். நான் யாண்டும் தொண்டனாயிருக்கக் கற்றுக் கொள்வேனாக.


மேடுகளில் இருக்கும் சிற்றாறுகளெல்லாம் பள்ளத்தில் இருக்கும் பேராற்றில் கலக்கின்றன. உயிர்கள் எல்லாம் தொண்டனுக்குச் சொந்தமாய்விடுகின்றன. மற்றவர்களுக்கு அவன் தலைவன் எனினும் தலைச்சுமை போன்று அவன் யாருக்கும் தொந்தரவு கொடுப்பதில்லை. மற்றவர்களுக்கு அவன் முன் நிற்பவன் எனினும் யாருக்கும் இடைஞ்சல் செய்வதில்லை. தொண்டன் யாருக்கும் எதிரியல்லன்.


அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.
-திருஞானசம்பந்தர்

No comments:

Post a Comment