Thursday, November 1, 2012

பூசணிக்காய் கறி

பூசணிக்காய் கறி

செய்வது எளிது , தின்பதும் சுவைதரும் , உடலுக்கும் நல்லது


தேவை: பூசணிக் காய் 1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 கப்



தாளிக்க:-


வரமிளகாய் 2
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்


வெள்ளை பூசணிக்காய் , (கல்யாண பூசணிக்காய்) 1/2 கிலோ


பூசணியை துண்டு துண்டாக நறுக்கி , கொஞ்சம் நீர் விட்டு ,
தேவையான உப்பை சேர்த்து அடுப்பில் வேகவைக்கவும்
10 நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கி , தண்ணீரை
வடிகட்டி வைக்கவும்.


அடுப்பில் வாணலியில் மிதமான சூட்டில் 2 முட்டை எண்ணை
விட்டு கடுகு , மிளகாய்வற்றல், உளுத்தம் பருப்பு தாளித்து
வடிகட்டி வைத்த பூசணிக்காயை (தேவையானால் நன்றாக
பிழிஞ்சு எடுக்கவும்) அதில் போட்டு நன்றாக வதக்கவும் .



10 நிமிஷம் வதக்கியதும் , அடுப்பில் இருந்து இறக்கி வைத்து 
தேங்காய் துருவல் போட்டு கிளறி , சூடாக பரிமாறவும் .

சிலர் இதனுடன் வேக வைத்த துவரம் பருப்பு சேர்ப்பார்கள் 
அதுவும் சுவை கூட்டும் 

இதனுடன் கொஞ்சம் மஞ்சள் போடி சேர்த்தால் பொறியல் 
மஞ்சள் கலரில் இருக்கும் ( அவரவர் விருப்பம்)

No comments:

Post a Comment