Friday, November 9, 2012

தற்போதம்



தினசரி தியானம்



தற்போதம்

உலக வாழ்வு என்னும் தூக்கத்தினின்று பாரமார்த்திக வாழ்வு என்னும் விழிப்பு நிலைக்குப் போவேனாக.


தூங்குபவனுடைய தரம் யாது என்று நமக்கு விளங்குவதில்லை. விழித்தான பிறகு அது நன்கு வெளியாகிறது. பாரமார்த்திக உணர்விலே விழித்து எழுந்திருப்பவனுக்குப் பெருவாழ்வு துவங்குகிறது. அவனுடைய செயல்களெல்லாம் அவனை மேன்மையின் கண் எடுத்துச் செல்வனவாகும். தெய்வப் பெற்றியே அவன்பால் பொலிகிறது.


உள்ளும் புறம்பும் உவட்டாத ஆனந்தக்
கள்ளருந்தி நின்றதிலே கண்ணுற்றாய் நெஞ்சமே.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment