Tuesday, November 6, 2012

தீபாவளி திக்கெங்கும் தினுசு தினுசாய்

தித்திக்கும் தீபாவளி திக்கெங்கும் தினுசு தினுசாய் 




பாரத நாட்டில் மட்டுமல்லாது பலநாடுகளிலும் பலவிதமாக
தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதே போல் இந்தியாவிலும்
தீபாவளியானது வரலாற்று ரீதியாகவும் கொண்டாடப்பட்டு
வருகிறது, அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


அசோகா தீபாவளி :- சாம்ராட் அசோகர் தன்னுடைய திக்
விஜயயாத்திரையை நிறைவு செய்து விட்டு, தனது நாட்டிற்கு
திரும்பிய நாள் தீபத்திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அந்த
நாளே அசோக தீபாவளி.


ஜைனர் தீபாவளி:- ஜைனர்களின் குருவான மகாவீரர் முக்தி
அடைந்த நாளே தீபாவளி, அந்த ஞான ஒளி மறைந்த தினத்தில்
தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து கொண்டாடுகின்றனர்.




ஜப்பானிய தீபாவளி:- முன்னோர்கள் அனைவரும் தம்தம்
சந்ததிநியருக்கு ஆசி வழங்கும் தினமாக இந்த தீபாவளி
பார்க்கப்படுகிறது. அந்த முன்னோர்களுக்காக விளக்குகளை
ஏற்றிவைத்து, அவர்களை பூமிக்கு வரவேற்கும் வழிபாடாக
இது கொண்டாடப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மீளாக
ஐப்பசிகளில் இது போன்று தீபாவளி கொண்டாடப்படுவது
வழக்கமாக இருக்கிறது. 'டோரோனாகாஷி' என்பது தான்
ஜப்பானிய திபாவளிக்கு பெயர்.




சீன தீபாவளி:- தீபாவளி அன்று விளக்குகளை வரிசையாக ஏற்றி
வைப்பார்கள். மேலும் தங்களின் வீட்டு கதவுகளில்
'வளங்கள் பெருகட்டும், நல்ல வாழ்வு அமையட்டும்',
என்பது போன்ற வாசகங்களை எழுதி வைப்பார்கள்.
புது வருட கணக்கையும் இந்த தீபாவளி நாளில்தான்
சீன மக்கள் தொடங்குகிறார்கள்.


சத்ரபதி சிவாஜி தீபாவளி:- மராட்டிய மன்னரான வீரச்
செயல்களில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி, தன்னுடைய
விரோதிகளின் கோட்டையை தாக்கி கைப்பற்றிய நாள்
தீபாவளி. அதன் நினைவாக பொது மக்கள் தங்கள் வீட்டு
வாசலில் மண்ணாலான ஒரு சிறிய கோட்டையை
கட்டுகிறார்கள். இந்த கோட்டை கட்டும் நிழ்சியில்
சிறார்கள் மிகுந்த உற்ச்சாகத்துடன் கலந்துகொள்வர்.
தீபாவளி தினத்தன்று மும்பையில் மண் கோட்டை
கட்டப்படுவதை இன்றும் காணலாம்.


நம்முடைய தீபாவளி நாம் அனைவரும் அறிந்ததே

No comments:

Post a Comment