Monday, November 5, 2012

நீ ஏழையா?



தினசரி தியானம்



நீ ஏழையா?

கடவுளோடு கூட்டுறவு கொண்டிருப்பதால் நான் பெறுதற்கரியதைப் பெற்றவனாகிறேன்.


பொருள் குறைந்து போய்விட்டதினால் நீ ஏழையாய் விட்டாயா? ஏழ்மை பொருளைப் பொறுத்தன்று. உடைமையில் வறியர் பலர் இருக்கின்றனர். மனவுறுதி படைத்திருப்பவன் ஏழையல்லன். கஷ்டதசையையும் மனவுறுதி ஒழுங்குப்படுத்தி விடுகிறது. கஷ்டகாலத்தை முன்னிட்டு மனம் தளர்வுறுபவன் ஏழை. அதை உறுதியுடன் சமாளிப்பவன் ஏழையல்லன்.


உணர்த்தும் உனை நாடாது உணர்ந்தவையே நாடி
இணக்குறுமென் ஏழைமை தான் என்னே பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment