விறுவிறுப்பான வெங்காயம் தக்காளி சாம்பார்
செய்வது சுலபம் , சுவைப்பது அதைவிட சுலபம்
பயத்தம் பருப்பு 1/2 ஆழாக்கு
வெங்காயம் 2
தக்காளி 3
பச்சை மிளகாய் 2
புளி கரைசல் 2 டீஸ்பூன்
தாளிக்க:- வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு
பயத்தம் பருப்பு வேகவசிடுங்க
வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் வதக்கி
வேகவைத்த பருப்பில் போட்டு, கொஞ்சம்
புளி கரைசல் விட்டு , 1 டீஸ்பூன் குழம்பு பொடி
போடுங்க . நல்லா கொதிக்கட்டும் சுமார்
15 நிமிஷம் .
கடுகு, உளுத்தம் பருப்பு , மிளகாய் வற்றல் தாளிக்கவும்
கருவேப்பிலை போடுங்க , வேணும்ன்னா கொத்தமல்லி போடுங்க
அவ்ளவுதாங்க இந்த சாம்பார் இட்லிக்கு
தொட்டுக்கவும் நல்லா இருக்கும்
சாப்பாட்டுக்கு ,சாப்பிட்டவும் நல்லா இருக்கும்.
இது எங்க வீட்டு All time Favourite உங்க வீட்ல ?
Super Sir, best for bachelors. Thanks and need more tips
ReplyDelete