Thursday, November 22, 2012

ஐம்பெரு வேள்வி




தினசரி தியானம்



ஐம்பெரு வேள்வி

பல வடிவங்களில் இருக்கும் பரம்பொருளுக்கு என்னைப் பண்புடன் பகுத்துக் கொடுத்து விடுவேனாக.


நித்தம் செய்யும் பரம்பொருள் வழிபாடே தேவ யக்ஞம். பக்தியுடன் பனுவல் படிப்பது ரிஷியக்ஞம். பெற்றோர்க்குப் பணிவிடை செய்வதும் காலஞ் சென்ற முன்னோர்க்கு நல்லெண்ணம் செலுத்துவதும் பிதிர் யக்ஞம். மக்களுக்கு தொண்டு புரிவது நர யக்ஞம். மற்ற உயிர்களிடத்து அன்பாயிருப்பது பூத யக்ஞம். இவ்வைந்தும் பெருவேள்விகளாம்.


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
-திருக்குறள்

No comments:

Post a Comment