காளிஃபிளவர் பலவிதமான உணவுவகைகள் செய்து சாப்பிடலாம் , அவைகளில் மிகவும் அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவது
காளிஃபிளவர் (Deep fry) (Gopi Manchuriyan Dry)
.
தேவை : காளிஃபிளவர் - 1
காரப்பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - சிட்டிகை
கடலை மாவு - 2 டீஸ்பூன்
சோள மாவு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - 200 ML
காளிஃபிளவர் நல்லா பூ பூவா கிள்ளி எடுத்து கொதிக்கும் தண்ணீரில்
போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் உப்பு, காரப்பொடி , சோள மாவு, கடலை மாவு
தண்ணீர் தேவையான அளவு விட்டு நன்றாக ( பஜ்ஜிக்கு மாவு செய்வது போல்)
தயார் செய்து கொள்ளவும்.
ஒரு வாணலியில் மிதமான சூட்டில் எண்ணை விட்டு கரைத்து வைத்துள்ள
கலவையில் , சுத்தம் செய்து வைத்துள்ள காளிஃபிளவர் துண்டுகளை
தோய்த்து எண்ணையில் போட்டு பொன்வறுவலாக பொரித்து எடுக்கவும்
இதை மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம் , எந்த உணவுக்கும்
ஒரு பக்க உணவாக(Side Dish) எடுத்துக்கொள்ளலாம்
No comments:
Post a Comment