Monday, October 29, 2012

காளிஃபிளவர் கறி

காளிஃபிளவர் கறி


'காலிப்பயல'   வெறுத்து ஒதுக்கிடலாம் , காளிஃபிளவர் கறிய வேண்டாம்னு
யாராவது சொல்லுவாங்களா .



தேவை : காளிஃபிளவர் - 1
காரப்பொடி - 2 டீஸ்பூன்
கறிப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணை - 2 டீஸ்பூன் (தேவைக்கேற்ப)


தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு


காளிஃபிளவர் நல்லா பூ பூவா கிள்ளி எடுத்து கொதிக்கும் தண்ணீரில்
போட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் 




அடுப்பில் வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு , கடுகு உளுத்தம்பருப்பு
தாளித்து இதில் சுடுநீரில் சுத்தம் செய்து வைத்த காளிஃபிளவர் போட்டு
அதனுடன் கொஞ்சம் மஞ்சள் பொடி , காரப்பொடி , தேவையான உப்பு சேர்த்து
நன்றாக வதக்கவும் , பிறகு இதனுடன் கொஞ்சம் கறிப்பொடி (பிரத்யேகமாக
தயார் செய்யப்பட்டது- சிறிது மிளகு, மிளகாய் வத்தல் , கடலைப்பருப்பு ,
தனியா இதை வறுத்து பொடி செய்து கொள்ளவும் ) சேர்த்து , கொஞ்சம் என்னை விட்டு மீண்டும் வதக்கி எடுக்கவும் .



அடுப்பில் இருந்து இறக்கிவைத்து கருவேப்பிலை , கொத்தமல்லி
சேர்க்கவும்.

சூடான , சுவையான காளிஃபிளவர் பொறியல் தயார்.


No comments:

Post a Comment