பாவக்காய் ஊறுகாய்
பாவக்காய் , பிட்லை, கூட்டு, வதக்கல் இதெல்லாம் சரி
நாம ரொம்ப விரும்பி சாப்பிடுவோம் , இப்ப இதே பாவக்காய்ல
ஊறுகாய் செஞ்சு சாப்பிடலாமா , நிச்சயமா கசக்கவே கசக்காது
கொம்பு பாகற்காய் 1/4 கிலோ
மிளகாய் தூள் 50 கிராம்
வெந்தய பொடி 1 டீஸ்பூன்
மிளகு பொடி 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
பெருங்காயம் 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
சிட்ரிக் அசிட் 1 டீஸ்பூன்
எண்ணை தேவைக்கேற்ப
பாவக்காயை ரவுண்டு ரவுண்டா நறுக்கிக் கொள்ளவும் நடுவில் உள்ள
விதையை நீக்கி விட்டு நீரில் நன்றாக அலம்பி , ஒரு துணியில்
உலர்த்தவும் பிறகு அதை அதே துணி கொண்டு நன்றாக துடைத்து
பிறகு ஒரு ஜாடியில் போடவும். இதனுடன், மஞ்சள் பொடி,வெந்தய பொடி, மிளகு பொடி
உப்பு, காரப்பொடி, பெருங்காயம் , சிட்ரிக் அசிட் சேர்த்து நன்றாக கைபடாமல்
குலுக்கி விட்டு ஜாடியி கற்றுபுகாமல் மூட்டி வைத்து விடவும் .
மறுநாள் காலை தேவையான எண்ணையை ஊற்றவும். பிறகு
நன்றாக மூட்டி வைத்து , தினம் ஒருமுறை கரண்டியால் கிளறி விடவம்
ஒருவாரம் கழித்து உபயோகப்படுத்தலாம்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள தேவாமிர்தமாக இனிக்கும்
No comments:
Post a Comment