தேவை:
கடலைப்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
வெல்லம் துருவியது 2 கப்
ஏலக்காய் 5
முந்தரி 5
தேங்காய் துருவல் 1/2 கப்
அரிசி 2 டீஸ்பூன் (ஊறவைக்கவும் )
காய்ச்சிய பால் 1 டம்பளர்
கடலைப்பருப்பு பயத்தம் பருப்பு ரெண்டும் சேர்த்து வேகவையுங்க
வெந்ததும் அதனுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைங்க
அவ்ளவுதான் பாயசம் தயார்
இதனுடன் , ஏலக்காய் , முந்திரி சேர்க்கவும் (முந்தரி நெய்யில் வறுத்து)
இதன் சுவை கூட்ட , கொஞ்சம் அரிசி (ஊறவைத்தது) கொஞ்சம் தேங்காய் துருவல்
அரைத்து கொதித்த பாயசத்துடன் சேர்த்து மேலும் சிறிது நேரம் (5 நிமிடம்)
கொதிக்க விடவும். காய்ச்சி ஆறிய பால் சேர்க்கலாம் சுவை மேலும் கூடும்
பெரும்பாலான பண்டிகைகளுக்கு இது ஒரு சிறந்த பாயசம்
No comments:
Post a Comment