Friday, October 12, 2012

பால் பாயசம் ! பால் பாயசம் !! பால் பாயசம்!!!

பால் பாயசம்


பால் பாயசம் , மாடு பால் கறந்து அந்த பாலில் பாயசம் செய்து 
சாப்பிட்ட காலம் மலையேறிவிட்டது 

இன்று பாகெட்  பால், பதப்படுத்தப்பட்ட பால் இப்படி பலவிதம் 

பாலின் சுவையே பாயசத்தின் சுவை



தேவை 2 ஆழாக்கு அரிசி


பால் 2 லிட்டர்
சர்க்கரை 1/2 கிலோ
ஏலக்காய் 5
முந்திரி 10 
நெய் 25 கிராம்
பாதம் 5 (விருப்பத்திற்க்கேற்ப)
திராட்சை 10 (விருப்பத்திற்க்கேற்ப)





முதலில் பாலை ஒரு பெரிய பாத்திரத்தில் விட்டு காய்ச்சி வைக்கவும்




இதில் பாதி பாலை ஒரு பாத்திரத்தில் விட்டு , அரிசியை களைந்து
இந்த பாலில் போட்டு கொதிக்க விடவும் , அடிக்கடி கிளறிக்கொண்டே
இருக்கவும் , பிறகு தனியாக எடுத்து வைத்த பாலை கொஞ்சம் கொஞ்சமாக
விட்டு அரிசி குழைந்து வரும்வரை கிளறி விடவும். பிறகு இதனுடன்
சர்க்கரை சேர்த்து நன்றாக அடிபிடிக்காமல் கிளறவும் (அடுப்பு சிம்மில் இருப்பது
நலம்)


இதனிடையே , முந்திரி , பாதம், திராட்சை நெய்யில் வறுத்து வைக்கவும்




அரிசி பெரும்பாலும் குழைந்து கரைந்து வரும் பதத்தில் அடுப்பில் இருந்து
இறக்கி , ஏலக்காய் , முந்திரி , பாதம் திராட்சை சேர்க்கவும் (பாதம், திராட்சை
அவரவர் விருப்பம்) நான் சேர்க்க மாட்டேன் .



இவ்வளவேதான் , சுவையான சூடான பால் பாயசம் தயார் , அனைவருக்கும்
சூடாக சுவைக்க கொடுத்து நீங்களும் சுவைத்து மகிழுங்கள்.


சிறு குறிப்பு : சற்று விரைவாக அரிசி குழைய வேண்டும் என்றால் அரிசியை
களைந்து ஒரு துணியில் உலரவைத்து , பிறகு மிக்சியில்
ஓன்று இரண்டாக உடைத்து பாலில் போடலாம்


பால் பாயசம் பருகப் பருக இறுதிவரை பரவசம் 

No comments:

Post a Comment