Friday, October 12, 2012

தெய்வங்கள் வாசம் செய்யும் திருவிளக்கு



தெய்வங்கள் வாசம் செய்யும் திருவிளக்கு 



Shubham Karoti Kalyaannam-Aarogyam Dhana-Sampadaa |
Shatru-Buddhi-Vinaashaaya Diipa-Jyotir-Namostute ||


திருவிளக்கு தெய்வத்தின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது, விளக்கில் மகாலட்சுமி நிரந்தர வாசம் செய்வதாகவும், விளக்கை சிவசொரூபம் என்றும் கூறுகின்றனர். விளக்குகளில் தலைமையாக இருக்கும் குத்து விளக்கில் அனைத்து தெய்வங்களும் வாசம் செய்கின்றன்.


குத்துவிளக்கின் அடிப்பாகம் ஆசனம் ஆகும், இது பிரம்மா பாகம். இடையில் உள்ள தண்டுப்பகுது விஷ்ணு பாகம். மேற்கு பகுதியில் உள்ள அகல் சிவனுக்குரிய பகுதி. சிகரமாகிய உச்சியில் சதாசிவன் இருக்கிறார். விளக்கில் ஊற்றப்படும் நெய் நாததத்துவம், திரி பிந்துத்வம். விளக்கின் சுடரில் திருமகளும் பிழம்பில் கலைமகளும் வாசம் செய்கின்றனர். விளக்கின் தீ சக்தி தேவியின் அம்சமாக பாவிக்கப்படுகிறது.


வீடு மற்றும் கோவில்களில் நடைபெறும் பூஜைகளில் 5 உபசாரங்கள் முக்கியமானது.


சந்தனமிடுவது ,
அர்ச்சனை செய்வது,
தூபம் காட்டுவது,
நிவேதனம் அளிப்பது,
தீபாராதனை செய்வது


ஆகிய ஐந்தும் பஞ்சோபசாரம் எனப்படும். இதில் இறுதியில் இடம்பெறும் தீபாராதனை மிகவும் முக்கியமானது. கோவில்களாக இருந்தாலும் வீடாக இருந்தாலும் உரிய நேரத்தில் சாமிக்கு விளக்கு போடுவதால் கிடைக்கும் புண்ணியம் அளவிடமுடியாதது.


விளக்கு ஏற்றுவதற்கு உரிய நேரமாக அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரையும். சூரிய அஸ்தமனத்திற்கு முற்பட்ட 5 மணியில் இருந்து 6 மணி வரையும் என்று கூறப்பட்டுள்ளன இரும்பு எவர்சில்வர் மற்றும் பீங்கான் விளக்குகளை தவிர்ப்பது நல்லது. வெள்ளி விளக்குதான் உபயோகிக்க வேண்டும் என்பது கிடையாது. மண்ணால் ஆனா அகலும் விசேஷமானது.

No comments:

Post a Comment