Friday, October 12, 2012

வெந்நீர் ஊற்றுகள்

சரும நோய் தீர்க்கும் வெந்நீர் ஊற்றுகள்




பாரதநாட்டில் உள்ள பல கோவில்களில் இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட நீர் ஊற்றுகள் , இறையருளால் தோன்றிய நீர் ஊற்றுகள் ஏராளமாக உள்ளன. அந்த புனித நீர் ஊற்றில் பக்தர்கள் நீராடி அங்குள்ள இறைவனை வழிபட்டு செல்வார்கள். இதே போல் மராட்டிய மாநிலத்தில் உள்ள அக்கோலி என்ற இடத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலிலும் 3 நீர் ஊற்றுகள் உள்ளன. இவை மற்ற கோவில்களில் இருப்பது போல் சாதாரண நீர் ஊற்றுகள் அல்ல, அவை வெந்நீர் ஊற்றுகள்.


இயற்கையை விஞ்சும் வகையில், புரியாத புதிராக விளங்கும் இந்த வெந்நீர் ஊற்றுகள் பற்றி இங்கே சற்று காணலாம்.


மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பிவண்டி தாலுக்காவில் கனேஷ்புரி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரின் அருகே உள்ள அக்கோலியில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தான் வெந்நீர் ஊற்றுகள் அமைந்துள்ளன


இராமாயண காலத்தில் இந்த சிவன் கோவில் அமைந்துள்ள இடம் வனப்பகுதியாக இருந்ததாகவும், அப்போது இங்கு வனவாசம் இருந்த ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் இந்த பகுதியில் புனித நீராடியுள்ளனர் என்றும் கூறபடுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிவன் கோவிலின் அருகே ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தும் அதிசயமாக 3 வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. ராமர், லட்சுமணன், மற்றும் சீதை ஆகியோர் நீராடிய இந்த வெந்நீர் ஊற்றுகளுக்கு அவர்களுடைய பெயரே சூட்டப்பட்டுள்ளது.


ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவன் கோவிலில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்றுகளில் நீராடிவிட்டு, பக்தர்கள் பலரும் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். அதன் பின்னர் கோவிலின் முகப்பில் உள்ள நந்தியின் காதில், தங்களது வேண்டுதல்களை பக்தர்கள் மெதுவாக கூறினால் நினைத்த காரியங்கள் கைகூடி நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


மகாசிவராத்திரி, தசரா, தந்த ஜெயந்தி,  தீபாவளி, அனுமன் ஜெயந்தி ஹோலி ஆகிய பண்டிகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
வெந்நீர் ஊற்றுகளில் குளித்தால் சரும நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம் என்பதால் பெரும்பாலான பக்தர்கள் வந்து இங்கு குளித்துவிட்டு சிவனை வழிபாட்டு செல்கினனர்.


3 வெந்நீர் ஊற்றுகளில் ஒரு வெந்நீர் ஊற்று மட்டும் இரும்பு கம்பிகளால் மூட்டி வைக்கப்பட்டிருக்கும். இதில் பக்தர்கள் நாணயங்களை போட்டு வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது மற்றொரு நம்பிக்கையாக இருக்கிறது.


சரும நோய்கள் நீங்க


அக்லோலி பகுதியல் உள்ள ஆற்றுப் படுகையில் 7 வெந்நீர் ஊற்றுகள் சீரான இடைவெளியில் அமைந்துள்ளன. இது மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். வஜ்ரேஸ்வரி, நித்யானந்த பாபா, மற்றும் ராமேஸ்வர் மகாதேவ் சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு வராமல் செல்வதில்லை. 7 குண்டுகளிலும் பெருக்கெடுக்கும் வெந்நீரில் குளித்துச் சென்றால் தாங்கள் செய்த தீமைகள், பாவங்கள், சரும நோய்கள் நீங்கும் என்று இங்கு வந்து நலம் பெற்றவர்களும் அதனை கண்டவர்களும் எடுத்துரைக்கின்றனர்.


ராமர் ஏற்ப்படுத்திய வெந்நீர் ஊற்று


வெந்நீர் ஊற்றுகள் பூமியை பிளந்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது, இராமாயண இதிகாசப்படி ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் 14 வருடங்கள் வனவாசம் இருந்தது இந்த வடாவளி காட்டுப்பகுதிதான். அப்போது ராமன், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர் குளிர் காலத்திற்கு பயன்படுத்துவதற்காக வெந்நீர் ஊற்றினை தோண்டியதாகவும், ராமனின் வில்லில் இருந்து சீறிச்சென்ற அம்புகள் குத்தி நின்ற இடத்தில் பள்ளம் தோன்றியதில் இருந்து வெந்நீர் ஊற்றுகள் ஏற்ப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

No comments:

Post a Comment