Saturday, October 6, 2012

அஞ்சுமுகத்தான்

அரவணைப்பான் அஞ்சுமுகத்தான்





அஞ்சிலே ஒன்றுபெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி 
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்றுபெற்ற 
அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றைவைத்தான் 
அவனெம்மை அளித்துக் காப்பான்



பஞ்சமுக (ஐந்து முகம்)  ஆஞ்சநேயரை, சனிகிழமை, மூல நட்சத்திரம்
அமாவாசை நாட்களில் வழிபடுவது சிறப்பு.

இவரது ஐந்து முகங்களுக்கும்  தனித்தனி நைவேத்தியம்  செய்வர், அதற்க்கு
தனி பலன் உண்டு.

வானரமுகம் கிழக்கு நோக்கி இருக்கும்:- இதற்க்கு வாழைப்பழம் , கடலை
                                                                                     படைத்து வழிபட்டால், மனத்தூய்மை
                                                                                     உண்டாகும்.

தெற்கு நோக்கிய நரசிம்ம முகத்திற்கு  :-  பானகம், நீர்மோர் நைவேத்யம்
                                                                                     செய்ய, எதிரிகள் தொல்லை நீங்கும்
                                                                                     மன தைரியம் ஏற்ப்படும்.

மேற்கு நோக்கிய கருட முகத்திற்கு      :-   தேன் சமர்ப்பித்து வழிபட முன்      
                                                                                      செய்த தீவினை நீங்கும்,.

வடக்கு நோக்கிய வராக முகத்திற்கு    :-   சர்க்கரைப்பொங்கல் படைத்தல்
                                                                                     கிரக தோஷம் நீங்கும் , செல்வம்
                                                                                     பெருகும்.

மேல்நோக்கிய ஹயக்ரீவ முகத்திற்கு:-   அவல், சர்க்கரை, வெண்ணை
                                                                                     படைத்து வழிபட, படிப்பு  
                                                                                     முன்னேற்றம், வாக்கு வன்மை
                                                                                     நல்ல சந்ததி உண்டாகும்  






பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரங்கள்

கிழக்கு முகம்-ஹனுமார்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர பகைவர்களால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய பூர்வகபி முகே ஸகல சத்ரு ஸம்ஹாரணாய ஸ்வாஹா.

தெற்கு முகம்-நரஸிம்மர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித பயங்கள், தோஷங்கள், பூத ப்ரேத, துர்தேவதை தோஷங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய தக்ஷிண முகே கரால வதனாய நிருஸிம்ஹாய ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா.

மேற்கு முகம்-கருடர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர எல்லாவித உடல் உபாதைகள், விஷக்கடி, விஷஜுரங்கள் ஆகியவை நீங்கும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய பச்சிம முகே கருடாய ஸகல விஷ ஹரணாய ஸ்வாஹா.

வடக்கு முகம்- வராஹர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர தரித்திரம் நீங்கி செல்வம் பெருகும்)

ஓம் நமோ பகவதே பஞ்சவதனாய உத்தர முகே ஆதிவராஹாய ஸகல ஸம்பத் கராய ஸ்வாஹா.

மேல்முகம்-ஹயக்ரீவர்

(இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து வர ஜன வசீகரம், வாக்குபலிதம், கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்)
ஓம் நமோ பகவதே பஞ்ச வதனாய ஊர்த்வ முகே ஹயக்ரீவாய ஸகல ஜன வசீகரணாய ஸ்வாஹா.




No comments:

Post a Comment