Saturday, October 6, 2012

இரண்டே மாத கோர்ஸ்

இரண்டே மாத கோர்ஸ்





12 ஆண்டுகள் படிக்க வேண்டிய படிப்பை, இரண்டே மாதத்தில் முடித்தவர்கள்
கிருஷ்ணரும், அவரது அண்ணன் பலராமரும். இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் குருகுலவாசம் செய்தனர்.

கிருஷ்ணர் தெய்வ அவதாரம் என்றாலும், மனிதனாகப் பிறந்து விட்டதால், மனிதனுக்குரிய குறை நிறைகளை அந்த அவதாரத்தில் அவர் காட்ட வேண்டியதாயிற்று.

மனிதனுக்கு குருபக்தி அவசியம் என்பதை உலகிற்கு உணர்த்த அவர் குருகுலத்தில் சேர்ந்ததாக பாகவதம்கூறுகிறது, இருந்தாலும், கிருஷ்ணருக்கு அந்த அவதாரத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் நிறைய இருந்ததால், மனிதனைப் போல் மரபை மீரவும் செய்தார்.

அக்காலத்தில் 12 ஆண்டுகள் குருகுல வாசம் செய்வது மரபு.  ஆனால், கிருஷ்ணரும், பலராமரும் 64 நாட்கள் மட்டும்  குருகுலத்தில் இருந்து, நாளைக்குஒரு சாஸ்திரமாக கற்று முடித்தனர். கிருஷ்ண, பலராமரின் தெய்வீக சக்தியே அவர்கள் பாகங்களை விரைந்து முதித்ததன் ரகசியம் என்கிறார் சாந்தீபனி முனிவர்.

No comments:

Post a Comment