Friday, October 12, 2012

நவராத்திரி நான் தரும் டிப்ஸ்



நவராத்திரி நான் தரும் டிப்ஸ்





ஆச்சு இன்னும் 2 நாளில் நவராத்திரி ஆரம்பம்
என்ன செய்யலாம் ஏது  செய்யலாம் என விழி பிதுங்கி
நிற்கும் வேளை . மனதில் ஆசைகள் ஆயிரமாயிரம்
ஆனாலும் அதை செய்து முடிக்க

பணபலம் வேண்டும்
மனோபலம் வேண்டும், 
மனித சக்தி துணை வேண்டும் 

இதுதான் :-

கல்வியா, 
செல்வமா, 
வீரமா ,.................. கலைமகள், அலைமகள், மலை மகள் 
இவர்களுக்கான நவராத்திரியின் சிறப்பு


சரி விஷயத்துக்கு வருவோம்


நவராத்திரிக்கு முதல்ல கொலு படி வைக்க வேண்டும்
எவ்வளவு படி வைப்பது , அதற்கேற்ப நம்மிடம் போம்பைகள்
இருக்கின்றனவா , இருப்பவை பழுதில்லாமல் இருக்கின்றதா
அதை முதலில் சரி பார்த்துக்கொள்ளுங்கள்


3 படி, 5 படி, 7 படி , 9 படி 11 படி(அதிகபட்சம்) இதுவே ஐதீகம்


நாளைக்கு சனிக்கிழமை , முதலில் பரணில் இருக்கும்
பெட்டிகளை கீழே இறக்கி பொம்மைகளை சரி பாருங்கள்
ஏதேனும் பின்னப்பட்ட பொம்மைகள் இருந்தால் அவற்றை
நீக்கி விடுங்கள்.


புதியதாக உங்கள் பட்ஜெட்க்கு ஏற்றாற்போல் சில பொம்மைகளை
இப்பொழுதே மைலாப்பூர் அல்லது உங்கள் ஏரியாவில் எது நல்ல
சந்தையோ அங்கு சென்று வாங்க ஆரம்பியுங்கள் விலை பேசி
நல்ல பொம்மைகளை வாங்குங்கள்.


அடுத்தது அமைக்கும் கொலு படிகள் மீது போட நல்ல துணி
இப்பொழுதே தெரிவு செய்து தேவை என்றால் கடையில் வாங்கி
விடுங்கள். உங்கள் விலை உயர்ந்த பட்டுப் புடைவைகளை
அதன் மேல் போட்டு வீணடிக்காதீர்கள் .


அடுத்தது அலங்காரம் செய்ய வண்ணக் காகிதங்கள் இவைகளையும்
முன்கூட்டியே வாங்கி விடுங்கள். வண்ண வண்ண விளக்குகள்
அவை ஏற்க்கனவே வாங்கியது இருந்தால் சரியான முறையில்
இயங்குகின்றதா என்று சோதித்து பார்த்து விடுங்கள்


அடுத்தது , தினமும் செய்யவேண்டிய சுண்டல் வகைகள்
மண்டைய பிச்சுக்காதீங்க , எனக்கு தெரிந்த வற்றை நான் இங்கே
கூறுகின்றேன்.


பட்டாணி சுண்டல், 
பயத்தம் பருப்பு சுண்டல், 
கடலைப்பருப்பு சுண்டல் , 
கொத்துக்கடலை சுண்டல்
எள்ளுப்பொடி , 
புட்டு, 
காராமணி இனிப்பு சுண்டல், 
காராமணி கார சுண்டல்
மொச்சை சுண்டல், 
வேர்கடலை சுண்டல் , 
 இதுவே 9 நாளுக்கு தேவையான
பட்டியல் கிடைச்சு போச்சு கவலையை விடுங்கள்



தொடரும் .....................

No comments:

Post a Comment