என்ன பார்க்கறீங்க , எல்லாம் ஒண்ணுதான் , பெயர்தான்
வேற. பொதுவா முதல் நாள் இரவு வீட்ல யாரும் சாப்பிடாம
சாதம் மீந்து போச்சுன்னா , அதுல கொஞ்சம் தண்ணி விட்டு
வச்சு மறுநாள் காலைல அதுல தயிர் விட்டு , பச்சைமிளகாய்
பச்சை வெங்காயம் தொட்டுண்டு சாப்பிட்டாலும் அதுவும் இதுதான்
ஆனா நாம இப்ப தனிய சூடா சாதம் வடிச்சு அதுல புளிக்காத
தயிர்விட்டு , கொஞ்சம் பால் விட்டு இப்டி அலம்பலா செஞ்சும்
சாப்பிடலாம்
புளிக்காத தயிர்
கொஞ்சம் குழைய வடித்த சாதம்
காய்ச்சிய பால்
தேவை:
அரிசி 2 ஆழாக்கு
புளிக்காத தயிர் 3 கப்
பால் 1 கப்
பச்சை மிளகாய் 3
இஞ்சி 1 துண்டு
மாங்காய் கிடைத்தால் 1 துண்டு
உப்பு தேவைக்கேற்ப
கொத்தமல்லி கொஞ்சம்
கருவேப்பிலை கொஞ்சம்
தாளிக்க: கடுகு
அரிசிய குக்கர்ல போட்டு கொஞ்சம் குழைசலா சாதம் வடிச்சிடுங்க
கொஞ்சம் சூடு ஆறினதும் , தயிர் அதுல விட்டு , தேவையான உப்பு
சேர்த்து நல்லா கலந்திடுங்க , கொஞ்சம் பால் சேர்த்து , இதனுடன்
துண்டு துண்டா நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், மாங்காய் சேர்த்து
கடுகு தாளிக்கவும் .
பிறகு கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும் .
வெய்யில் காலத்திற்கு ஏற்ற உணவு. பயணங்கள் மேற்கொள்ளும் போது
எளிதில் தயார் செய்து எடுத்துசெல்ல ஏதுவானது. பயணங்கள் மேற்கொள்ளும் போது
புளிக்காமல் இருக்க பால் கொஞ்சம் கூடுதலாக சேர்க்கவும் .(பழக பழக பாலும் புளிக்கும்- பழ மொழி)
இன்னமும் ரொம்ப ரிச்சா இருக்கணும்னா , முந்திரி, திராட்சை, பச்சை திராட்சை
இவற்றை தேவைக்கேற்ப சேர்க்கலாம்
No comments:
Post a Comment