மாங்காய் சாதம் - (MANGO RICE) By: Savithri Vasan
தேவையான பொருட்கள்
அரிசி - 2 டம்பளர்
மாங்காய் - 1 சிறியது (சுமாரான புளிப்பு)
காய்ந்த மிளகாய் - 3
வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 2 கொத்து
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
நிலக்கடலை - 50 கிராம்......(நெய்யில் வறுத்துக் கொள்ளவும்)
நல்ல எண்ணெய் -50 கிராம்
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
அரிசியை கழுவி 3 கோப்பை தண்ணீர் விட்டு குழையாமல் வேக வைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும். மாங்காயை துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, ஊளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், வெந்தயத் தூள், மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். அடுத்து துருவிய மாங்காயைப் போட்டு நன்றாக வதக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்றாக கலந்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.
இதில் ஆறிய சாதம், வறுத்த நிலக்கடலை போட்டு, சாதம் குழையாமல்
கிளறி வைக்கவும்.
சுவையான மாங்காய் சாதம் தயார்
Looks yummy mama wil try yr mehtod for sure
ReplyDelete