Sunday, October 14, 2012

நாலடியார் -- (389/400)

நாலடியார் -- (389/400)


சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வயல் ஊரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன்! -- தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான் !

பொருள்:- கோரைப் புல்லைப் பறித்து விடுவதால் தண்ணீர்
நன்றாகத் தெரிகின்ற குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த ஊர்களை
உடைய ஏன் தலைவனின்(கணவனின்) மீது முன்பெல்லாம்
ஒரு ஈ வந்து உட்கார்ந்தாலும், அதைப் பொறுக்க மாட்டாமல்
வருத்தியவளும் நானே! இப்பொழுதோ, தீப்பொறி பறக்குமாறு,
விலை மகளிர் தமது கொங்கைகளால் தாக்கிப் போர் செய்த,
குளிர்ந்த சந்தனக் கலவையைப் பூசப்பெற்ற அவனது
மார்பைப் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்கின்றவளும்
நானேதான்!

No comments:

Post a Comment