தினசரி தியானம்
தீங்கிழைத்தல்
நிகழ்வதெல்லாம் நின் செயல் எனக் காண்பவனுக்கு நலம் ஏது, தீது ஏது?
மனிதன் ஒருவனுக்குப் பிறர் தீங்கு இழைக்கின்றனர். அத்தீங்கு அவனுக்கு எப்படி வந்ததென்று எண்ணிப் பார்க்கவேண்டும். அவனது மனத்தில் உள்ள தீங்கு புறச்செயலாக வடிவெடுத்து அவனிடம் வந்தது. தீங்கை ஏற்பதற்கான தீய மனமுடையவனுக்கே புறவுலகினின்று தீங்கு விளைகிறது. சான்றோனுக்கு வரும் தீங்கை அவன் தீங்காக ஏற்பதில்லை.
புண்ணியபா வங்கள்
பொருந்தாமெய் யன்பரெல்லாம்
நண்ணியபே ரின்பசுகம்
நானணைவ தெந்நாளோ?
......தாயுமானவர்

No comments:
Post a Comment