Tuesday, October 9, 2012

வாழைப்பூ கறி

வாழைப்பூ  கறி


வாழையின் எல்லா பாகங்களும் மனிதனுக்கு உதவுகின்றது
அந்த வகையில் வாழைபூ மிகவும் முக்கியமான ஓன்று


வாழைப்பூவில்  கூட்டு , வடை , உசிலி செய்து சாப்பிடலாம்
ஏன் நல்ல சுவையான கறி(பொறியல்) செய்தும்  சாப்பிடலாம்





தேவை : நல்ல வாழைபூ 1
மஞ்சள் பொடி  சிட்டிகை
உப்பு  : தேவைக்கேற்ப
தேங்காய் துருவல்   3 டீஸ்பூன்

தாளிக்க:- வரமிளகாய், கடுகு, உளுத்தம் பருப்பு


வாழைப்பூவை நடுவில் காம்பு ஆய்ந்து , மோர் கலந்த நீரில்
நறுக்கி போட்டு வைக்கவும்




அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் வாழைப்பூவுடன் தண்ணீர் சேர்த்து
கொஞ்சம் உப்பு , மஞ்சள்  பொடி போட்டு வேக வைக்கவும்

வெந்ததும் தண்ணீரை வடித்து  வாழைப்பூவை தயார் செய்து கொள்ளவும்


அடுப்பில் வாணலியில் கொஞ்சம் என்னை விட்டு , கடுகு, உளுத்தம்பருப்பு
வரமிளகாய் , தாளித்து இதனுடன் வாழைப்பூவை சேர்த்து தேவையான உப்பு சேர்த்த் நன்றாக 10 நிமிடம் வதக்கவும்.



அடுப்பில் இருந்து கீழே இறக்கி , தேங்காய் துருவல் சேர்க்கவும்

சுவைக்கவும்



No comments:

Post a Comment