Tuesday, October 9, 2012

நாலடியார் - (384/400)

நாலடியார்   -  (384/400)

கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடயாள், ஊர்நான்  இயல்பினாள், உட்கி
இடனறிந்து ஊடி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

பொருள்:-  கண்ணனுக்கு இனிதான உடல் வனப்பை
உடையவளாகவும், தன் காதலானது விருப்பத்திற்கு
ஏற்ற வகையில் எல்லாம் தன்னை அலங்கரித்துக்
கொள்ளுபவளாகவும், அச்சம்  உடையவளாகவும்
ஊரில் உள்ள பிற ஆண்கள் அஞ்சி ஒதுங்கும் இயல்பை
உடையவளாகவும், தன் கணவனுக்கு அஞ்சி, பணிந்து,
காலமறிந்து அவனோடு பிணங்கிப், பின் இன்பம்
உண்டாகும்படி உடனே அறிந்து ஊடல் தீர்க்கின்றவளாகவும்
கபடமில்லாத பேச்சுக்களை உடையவளாகவும் இருப்பவளே
சிறந்த மனைவியாவாள். 

No comments:

Post a Comment