Wednesday, October 3, 2012

தன் கடன்

தினசரி தியானம்


தன் கடன்


எனக்கு ஏற்பட்டுள்ள கடமையை இறைவா, உனது ஆராதனையாக நான் அல்லும் பகலும் ஆற்றுவேனாக.


உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் அதனதன் கடமையுண்டு. இறைவனுடைய ஆட்சியில் எல்லாவுயிர்களுக்கும் பலதரப்பட்ட கடமைகள் உண்டு. தனக்கு அமைந்துள்ள கடமையை ஒழுங்காகச் செய்வது மானுட வாழ்வின் நோக்கமாகும். கடமையைத் தேவாராதனை போன்று செய்வதே முன்னேற்றத்துக்கு உற்ற உபாயம்.


தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே.
-அப்பர்

No comments:

Post a Comment