Wednesday, October 3, 2012

நாலடியார் - (378/400)

நாலடியார் -  (378/400)

ஏமாந்த போழ்தின் இனியார்போன்று இன்னாராய்த்
தாமார்நத  போதே  தகர்க்கோடாம்  --  மானோக்கின்
தன்நெறிப் பெண்டிர்  தடமுலை  சேராரே
'செந்நெறிச் சேர்தும்' என்பார்.

பொருள்:- தாம் மோகத்தால் மயங்கிப் பொருள்
தந்தபோது இனியவர்களைப் போல் தம்மிடம்
வலிய விரும்பி இருந்து, தனது பொருளை எல்லாம்
அனுபவித்த பிறகு தாம் பொருள் இழந்த காலத்தில்
விரும்பிச் சென்ற போது, ஆட்டுக்கிடாவின் கொம்பு போல்
திருகி, மான் போன்ற மருண்ட பார்வையுடைய தன மனம்
போன போக்கில் செல்லும் பொருட் பெண்டிர் போல்
நடக்கும் வேசியரின் பெரிய தனங்களை, 'செம்மையான
வழியிலே செல்வோம்' என்று எண்ணுகிறவர் நாட மாட்டார்கள்.

No comments:

Post a Comment