பழமொழிகள்
 பன்றி பல குட்டி சிங்கம் ஒரு குட்டி.
 பன்றிக்குப் பின் போகிற கன்றும் கெடும்.
 பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.
 பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?
 பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.
 புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
 புத்திமான் பலவான்.
 புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
 புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?
 பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது.
 பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
 பூவிற்றகாசு மணக்குமா?
 பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
 பெண் என்றால் பேயும் இரங்கும்.
 பெண் வளர்த்தி பீர்க்கங் கொடி.
 பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
 பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
 பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
 பெருமாள் இருக்கிற வரையில் திருநாள் வரும்.
 பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.
 பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
 பேசப் பேச மாசு அறும்.
 பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை.
 பேர் இல்லாச் சந்நிதி பாழ், பிள்ளை இல்லாச் செல்வம் பாழ்.
 பேராசை பெருநட்டம்.
 பொங்கும் காலம் புளி, மங்குங் காலம் மாங்காய்.
 பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.
 பொய் சொன்ன வாய்க்குப் போசனங் கிடையாது.
 பொல்லாதது போகிற வழியே போகிறது.
 பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.
 பொறி வென்றவனே அறிவின் குருவாம்.
 பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காட்டாள்வார்.
 பொறுமை கடலினும் பெரிது.
 பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
 போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
 போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
 போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.
தொடரும்   பழ மொழிகள் ...................................தொடர்ந்து வாருங்கள்  
No comments:
Post a Comment