தினசரி தியானம்
தமம்
பொறிவழியே போகுமளவு பரம்பொருளே, நான் உனக்கு வேற்றான் ஆய்விடுகிறேன்.
சுவையை நம்பி மீன் தூண்டிலில் சிக்கிக் கொள்கிறது. கண் கொண்டு தீயில் பற்று வைத்து விட்டில் பூச்சி அதில் வீழ்ந்து மாய்கிறது. ஊறு அல்லது ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடுகிறது. ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது. மணத்தை நாடி வண்டு மலரில் அகப்படுகிறது. இந்த ஐம்பொறிகளையும் நம்பியோடுகிற மனிதன் கதி என்னாவது? ஐம்பொறிகளை அடக்குவது தமம்.
ஆமைவரும் ஆட்கண்டு
ஐந்தடக்கஞ் செய்தாற்போல்
ஊமை உருக்கொண்டு
ஒடுங்குவதும் எக்காலம்?
-பத்திரகிரியார்
No comments:
Post a Comment