நாலடியார் -- (393/400)
கம்மஞ் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூந்தொடுப்பாள்,
கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாலள், 'துனையிழர்க்கு
இம்மாலை என்செய்வது! என்று.
பொருள்:- கொல்லுத் தொழில் செய்கின்ற கம்மாளர்கள்,
தமது கருவிகளை வேலை இல்லாது அடங்கச் செய்த,
மயக்கம் கொண்ட மாலைப்பொழுதிலே, மலர்களை
ஆராய்ந்து எடுத்து, தன் கணவனுக்கு இடுவதற்கு
மாலையாகத் தொடுப்பவள், 'நாயகன் இல்லாதவர்களுக்கு
இந்த மாலை என்ன பயன் அளிக்கும்?' என்று தன் கையில்
உள்ள மாலையைப் போட்டுவிட்டு, கண் கலங்கி அழுதாள்
No comments:
Post a Comment